அதி நவீன ஜீரண நல மையம் வி.ஜி.எம் மருத்துவமனையில் துவக்கம்

ஜீரணக் கோளாறுகளை கண்டறிவதற்கான அதி நவீன ஜீரண நல மையம் கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் உலகெங்கும் ஜீரணக்கோளாறு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜீரண கோளாறுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள வி.ஜி.எம் மருத்துவமனை சார்பில் உயர்நிலை ஜீரண பரிசோதனை நல மையம் துவங்கப்பட்டுள்ளது.

இதயத்தின் மின் அலைகளை எவ்வாறு ஈசிஜி கண்டறிகிறதோ அதேபோல் இரைப்பயின் மின் அலைகளை இக்கருவி கண்டறியும் எனக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு பசியின்மை, பொருமல் போன்றவை ஏற்பட்டாலும் இக்கருவியின் மூலம் சுலபமாக கண்டறியமுடியும் என்று வி.ஜி.எம் மருத்துவமனையின் சேர்மன் மோகன் பிரசாத் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். இந்த எலக்ட்ரோ கேஸ்ட்ரோ கிராபி என்ற இக்கருவியின் மூலம் இரைப்பையில் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் பிரச்சனை என்ன என்பதை கண்டறியும் இலகுவான முறை இதன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.