தமிழ்நாடு வேளாண் பல்கலையில் “வேளாண்மையில் இயற்கை வள மேலாண்மை” – கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் “வேளாண்மையில் இயற்கை வள மேலாண்மை – சாத்தியங்களும் வாய்ப்புகளும்” என்ற சர்வதேச கருத்தரங்கு ஆக்ஸட் 23 முதல் 27 வரை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கின் துவக்க விழா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் (23.08.2021) நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் தமது தலைமையுரையில் இயற்கை வள மேலாண்மை இயக்ககம் உள்ளடக்கிய மண்ணியல் மற்றும் வேதியியல் துறை, நுண்ணுயிரியல் துறை, சுற்றுசூழல் துறை, சுற்றுசூழல் அறிவியல் துறை, தொலையுணர்வு மற்றும் புவியியல் தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றால் கண்டுபிடிக்கப்பட்ட உத்திகளான மண் வள கணினி மென்பொருள், தமிழ்நாடு வேளாண் பல்கலை இடுபொருட்கள் ஆகியவற்றை குறித்து பேசினார்.

புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயற்க்கை மேலாண்மை இணை இயக்குநர் சௌத்ரி, “பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு மண் நீர் ஆற்றல் தொடர்பினை பாதுகாத்திட வேண்டுமென” தனது உரையில் கூறினார்.

இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஹீலல் மேகன் தன் உரையில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை பட்டியலிட்டு, அங்கக மேலாண்மை, கார்பன் பதிவுகள், மண்ணில் கார்பனை நிலைநிறுத்துதல் மற்றும் வேளாண் தரவுகள் ஆகியவற்றையும் விளக்கினார்.

இவ்விழாவில் 2021 ம் ஆண்டிற்கான இயற்கை வள மேலாண்மை உத்திகள் என்ற புத்தக தொகுப்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தரால் வெளியிடப்பட்டது.