ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் நாள்

ஏ.ஐ.சி.டி.இ (AICTE) மற்றும் யூ.ஜி.சி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட என்.பி.டி.எல் (NPTEL) உள் அமைப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் உள்ளது. சுயமாக கற்றுக்கொள்வதையும் மற்றும் பல்துறை வல்லுனர்களிடமிருந்து கற்றுக் கொள்வதையும் இந்த ஆன்லைன் கல்வி முறை ஊக்குவிக்கிறது.

என்.பி.டி.எல் தேர்வுகளில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று சாதித்தவர்களை பாராட்டி மேலும் ஊக்கப்படுத்துவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் கற்றல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான டிஜிட்டல் கற்றல் நாள் ஆகஸ்ட் 10 அன்று நடத்தப்பட்டது.

கேம்பிரிட்ஜ் ஆங்கில மதிப்பீடு, தெற்காசியா, மண்டல இயக்குனர், அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜூலை 2019 முதல் நவம்பர் 2020 வரை 686 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்.பி.டி.எல் சான்றிதழை பெற்றுள்ளனர்.

டிஜிட்டல் கற்றல் தினத்தின் போது 30 எலைட் + தங்க சான்றிதழ்கள் மற்றும் 10 சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 8 செமெஸ்டர்களிலும் தொடர்ச்சியாக முதல் 100 அமைப்புகளுக்குள் எஸ்.ஆர்.இ.சி இருந்து வருவதால் நட்சத்திர சான்றிதழ் வழங்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் என்.ஆர்.அலமேலு விழாவிற்கு தலைமை வகித்து பேசும்போது சுய கற்றல் மற்றும் தொடர் கற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். என்.பி.டி.எல் பாடங்களை தமிழ் மொழியில் மொழி பெயர்த்த ஆசிரியர்களை கல்லூரி முதல்வர் பாராட்டினார்.