எஸ்.என்.எம்.வி கல்லூரியில் சுதந்திரதின நிகழ்வு

கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75-வது சுதந்திர தினவிழா ஞாயிற்றுக்கிழமை (15.08.2021) கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் சுனில்குமார் நஹாடா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி, விழாவினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாகிகளின் சிறப்புரையாக, சுதந்திரமான இந்தியாவில் நாம் பிறந்துள்ளோம். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாமைப் போன்று நமது குறிக்கோளை அடைய முழு முயற்சியோடு செயல்பட வேண்டும். மகாபாரதக் கதையோடு ஒப்பிட்டுத் தலைமைப் பண்போடு நாம் செயலாற்ற வேண்டும் என்பதையும் சுதந்திர தினத்தின் சிறப்பினையும் கூறினார்.

சிறப்பு விருந்தினர்கள் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தம்மன் பல கல்லூரிகளில் கலந்து கொண்டு விருது பெற்ற தேசிய மாணவர் படை மாணவர்களையும் பாராட்டி கல்லூரியின் சார்பாக விருது வழங்கி சிறப்பித்தனர்.

கோவை நலச்சங்கம் மற்றும் கல்லூரியின் தலைவர் ரமேஷ் சி பாஃப்னா, துணைத்தலைவர் மகாவீர் போத்ரா, எஸ்.என்.வி பள்ளியின் செயலாளர் ரமேஷ் சுடாலியா, முன்னாள் கல்லூரியின் தலைவர் அசோக் ஜி பாஃப்னா, கோவை நலச்சங்கத்தின் கருவூலர் அசோக் லூனியா, ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கல்லூரியின் முதல்வர் சுப்பிரமணி வரவேற்புரையும், மொழிப்புலத் தலைவர் மஞ்சுளா சுரேஷ் நன்றிரையும் வழங்கினார். விழாவின் இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.