தொடங்கியது பிளஸ் 2 பொதுத் தேர்வு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (01.03.18) பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ மாணவிகளும் 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

 

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு நிறைவடையும். மாணவர்கள் தேர்வு அறைக்கு ஷூ, சாக்ஸ், காலணி, பெல்ட் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை பெற வசதியாக தேர்வுக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக ஏற்கனவே 4 தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதலாக 9385494105, 9385494115, 9385494120, 9385494125 ஆகிய செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்களுக்கு தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்.ஒன்இந்தியா.காம்