நாராயணா பள்ளியில் மாற்றுக் கல்வி முறை!

கோவை கணபதி பகுதியில் இயங்கி வரும் நாராயணா பள்ளி பல்வேறு யுக்திகளை கையாண்டு மாற்றுக் கல்வி முறையை அமல்படுத்தி, மாணவர்களை நல்வழிப்படுத்தி வருகிறது.

கொரோனா தொற்று கல்வி முறையை மாற்றியுள்ளதோடு சமூகவியல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கக் கொள்கைகள் பாரம்பரிய கல்வி நடைமுறைகளை பாதித்துள்ளது. நாராயணா கல்வி நிறுவனங்கள் அதன் மாணவர்களை மெய்நிகர் கற்றல் முறையில் வளர்ப்பதில் இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர் மன்றத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள், பள்ளி செயல்பாடுகள் மற்றும் சேவைத் திட்டங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் முன்னெடுப்பதன் மூலம் மாணவர்களுக்கு தலைமை பண்பை வழங்குகிறது. பள்ளி நலன் மற்றும் சமூக நலனுக்கு நிகழ்வுகளை திட்டமிடுவது தவிர மாணவர் மன்றம் மாணவர் அமைப்பின் குரலாக செயல்படுகிறது.

நாராயணா பள்ளியில் நடக்கும் அனைத்து நிகழ்வுக்கும் தமிழ்நாடு பொது மேலாளர் கிரிபாபு, கோவை நாராயணா பள்ளியின் முதல்வர் சகீனா ஆகியோரது முயற்சியின் பேரில் இந்த பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.