2 வதுஅலை இன்னும் முடிவுக்கு வரவில்லை

இந்தியாவில் 2வதுஅலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்தியாவில் 2வது அலையைப் பொறுத்தமட்டில், அது இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் உலகளவில் தினசரி பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தினசரி 4.7 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

12 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 44 மாவட்டங்களில் நேற்று முன்தினம் முடிந்த ஒரு வாரத்தில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு மேலாக உள்ளது .

கேரளா, மராட்டியம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வந்துள்ளது.

கடந்த வாரம், கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் கிட்டத்தட்ட சரி பாதி அளவிலானவர்கள் (49.85 சதவீதம் ) கேரள மாநிலத்தினர் ஆவார்கள் .

கடந்த மே மாதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண் ணிக்கையைப் போல இரு மடங்கு எண்ணிக்கையிலானவர்கள் ஜூலை மாதம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார் .