போப்பாண்டவருக்கு ஸ்பைட்டர் மேன் முகமூடி பரிசு!

வாட்டிகன் சான் டமாசோவின் (San Damaso) விஐபி பார்வையாளர்களின் பகுதியில் ஸ்பைட்டர் மேன் உடையில் அமர்ந்திருந்த மேட்டியா வில்லார்டிடா (Mattia Villardita )எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தார்.

28 வயதான இவர் நான்கு ஆண்டுகளாக காமிக் சூப்பர் ஹீரோக்களின் உடையணிந்து குழந்தைகள் மருத்துவமனைகளில் நடித்து வருகிறார். இவரது தன்னலமற்ற சேவைக்காக போப்பின் வாராந்திர பார்வையாளர்கள் சந்திப்பில் இவருக்கு விஐபி இருக்கை வழங்கப்பட்டது.

ஸ்பைட்டர் மேன் உடையில் இருந்தவரை போப்பாண்டவர் சந்தித்து கை குலுக்கினார், அப்போது போப்பாண்டவரிடம் குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை

செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக மேட்டியா வில்லார்டிடா கூறினார்.போப்பாண்டவருக்கு ஸ்பைட்டர் மேன் முகமூடியையும் பரிசாக வழங்கினார்.