விரைவில் வரவிருக்கும் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ்!

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்ச்சான எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் என்ற மாடலை ஜூன் 22 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை சியோமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளது.

இதில் புது ஸ்மார்ட்வாட்ச் SpO2 மாணிட்டரிங் வசதி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. தோற்றத்தில் இது எம்ஐ வாட்ச் ரிவால்வ் போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இதில் அமேசான் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.

முன்னதாக எம்ஐ வாட்ச் கலர் என்ற பெயரில் சீன சந்தையில அறிமுகம் செய்யப்பட்டது. இதே மாடல் இந்திய சந்தையில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் எம்ஐ வாட்ச் கலர் ஸ்போர்ட்ஸ் எடிஷன் இந்தியாவில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஆக்டிவ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அம்சங்களை பொருத்தவரை புது ஸ்மார்ட்வாட்ச் 1.39 இன்ச் அமோலேட் (AMOLED) ஸ்கிரீன், பில்ட்-இன் ஜிபிஎஸ், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டணட் வசதி, இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது.