இளைய சமுதாயம் அசால்ட்டாய் இருக்கிறது.! அலாட்டாய் இருக்கிறது.!

– பட்டிமன்றம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை பைந்தமிழ் மன்றமும் நாட்டு நலப்பணித்திட்டமும் இணைந்து “இன்றைய இளைய சமுதாயம் எப்போதும் அசால்ட்டாய் இருக்கிறது.! அலாட்டாய் இருக்கிறது.! எனும் தலைப்பில் இணையவழி பட்டிமன்றம் (13.6.2021) நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கினார். பட்டிமன்ற நடுவர், தொலைக்காட்சி பேச்சரங்க இயக்குனர் அண்ணாசிங்காரவேலு நடுவராக இருந்து சிறப்பு செய்த இந்நிகழ்வில் கவிஞர்கள், பேராசிரியர்கள் பேச்சாளர்களாக இருந்து தம் கருத்துக்களை பொழிந்தனர்.

அசால்ட்டாய் இருக்கிறது.! அணியில் கவிஞர் ம. வினோத்குமார், கவிஞர் கா. விக்னேஷ், மயிலாடுதுறை முனைவர் முத்துலட்சுமி கருத்துக்கள் வழங்கினர்.

அலாட்டாய் இருக்கிறது.! அணியில் வேதாரணயம் கவிஞர் இல.அகிலன், கே.பி.ஆர் (CAS) அலுவலக மேலாளர் கவிஞர் வெ.ரெங்கநாதன், தாராபுரம் கவிஞர் தமிழினி சரண்யா கலந்து கொண்டு உரை வழங்கினர்.

இன்றைய சூழ்நிலையை இளைய சமுதாயம் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை ஊடகம் வாயிலாக நிறை, குறைகளை பேச்சாளர்கள் முன்வைத்து எடுத்துக்கூறினர். சூழ்நிலைகள் சூழ்ந்து நின்றாலும், அதைப் பயன்படுத்துகின்றவர்களின் பாங்கினைப் பொறுத்ததே என்பதை அதன் சிறுமை, பெருமை அமையும்.

மேலும், பார்ப்பவர் கண்ணோட்டங்களைப் பொறுத்ததே என்பதை சிந்திக்க வைக்கும் சிறுகதைகள் கூறி பண்பட்ட நல்லதோர் தீர்ப்பு வழங்கி இன்றைய இளைஞர் சமுதாயம் ஆசைக்கு அசால்ட்டாய் இருந்தாலும் எப்போதும் அலாட்டாய்..! தான் இருக்கிறது என்பதை முன் வைத்து நடுவர் அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

கல்லூரி துறை சார் புல முதன்மையர்கள் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் 110க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.