மத்திய போக்குவரத்து அமைச்சருடன் வானதி பேச்சுவார்த்தை

டெல்லியில், இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு குறுந்தொழில் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து கோவை சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தொழில் துறை சம்பந்தமான தேவைகள் குறித்து அட்டவணை கடிதமும் கொடுத்தார்.