பெண்களை விட ஆண்கள் மிக குறைந்த அளவிலேயே சிரிக்கின்றனர்

– யேல் பல்கலைக்கழகம்

நமது சமூகத்தை பொறுத்தவரை ஒரு ஆண் தனது உணர்ச்சிகளை பெரும்பான்மையான நேரங்களில் வெளிபடுத்த மாட்டார்கள் என்ற கருத்து ஆழமாக உள்ளது. அது ஒரு சில நேரங்களில் நம்ப கூடியதாகவும் உள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த யேல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் ஒரு நாளைக்கு பெண்கள் 62 முறையும் ஆண்கள் 8 முறை மட்டுமே சிரிக்கின்றனர் என தெரியவந்துள்ளது. ஆண்கள் தங்கள் உணர்வுளை வெளிப்படுத்த மாட்டார்கள் என்று சமூகம் குறிப்பிடுவதே இதற்கு காரணம் என்கின்றனர்.

இந்த கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. ஆண்கள் தங்களது சோகத்தை வெளிப்படுத்தமாட்டார்கள் என்ற கருத்து தான் இந்த அளவிற்கு சென்றுள்ளதா என்று தெரியவில்லை. அப்படியில்லை என்றால் குடும்ப பொருளாதார சுமை தன் மீதுள்ளதால் தான் அவர்களால் சிரிக்க முடியவில்லையா?.

இது சற்று சோகத்தை ஏற்படுத்த கூடிய ஒன்று தான். ஆனால் சிரிப்பு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்றால் அவனது உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நாமே வைத்திருக்கும் மிக பெரிய வைத்தியம் சிரிப்பு.

மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. அந்த உணர்வின் மிக அற்புதமானது சிரிப்பு. நம் சிரிப்பதால் நாம் மட்டுமின்றி நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். இத்தைகைய அற்புதமான உணர்வை கொண்ட நாம் அதனை வெளிப்படுத்தாது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.