சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை : மலை ரயில் போக்குவரத்து ரத்து

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல  தடை விதித்ததை தொடர்ந்து, நாளை முதல் நீலகிரி மலை ரயில் போக்குவத்து ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள  சூழலில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, இரவு 10 மணிக்கு  மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பிரதேச சுற்றுலா தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில், நீலகிரி மலை ரயில் சேவையும்  ரத்து செய்யப்பட்டுள்ளது

மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.நீலகிரி மலை ரயில் சேவையானது மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி காலை புறப்பட்டு மதியம் நீலகிரி சென்றடையும், பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு மாலை மேட்டுப்பாளையம் வந்தடையும். அதேபோல், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மூன்று முறை மலை ரயில் சென்று வரும்.