கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு செல்கின்றன !

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை காலை துவங்க உள்ளது. கோவையை பொறுத்தவரை இங்குள்ள 10 தொகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகள் இன்று (5.4.2021) துவங்கியுள்ளன. கோவையில் மொத்தம் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன. இதனுடன் தேர்தலுக்கு தேர்வயான பேனா, பேப்பர்கள், மை, படிவங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன.

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற 21 ஆயிரத்து 500 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று இரவே வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று தங்கிவிட்டு காலை 7 மணிக்கு தேர்தலை நடத்த உள்ளனர். மாலை 7 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.