பூ மார்க்கெட் பகுதியில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டு பிரச்சாரம்

கோவையில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்ட படியே மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 5 நாட்களாக கோவையில் தங்கியபடியே பல்வேறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதுடன், தான் போட்டியிடும் தெற்கு சட்டமன்ற தொகுதியிலும் பல்வேறு வகைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாள்தோறும் காலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் நடைப்பயிற்சி மேற்கண்டவாறு மக்களை சந்தித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, காந்திபுரம் அன்னபூர்னா ஹோட்டலுக்கு சென்று காபி குடித்த கமல்ஹாசன், அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். நடிகர் கமல்ஹாசனுக்கு ‘போற்றி பாடடி, பெண்ணே, தேவர் காலடி மண்ணே’ பாடலை ரசிகர் ஒருவர் பாடிகாட்ட, அதை அவர் ரசித்தார். தொடர்ந்து, கோவை பூ மார்க்கெட் பகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டபடி பிரச்சாரமும் செய்தார்.  பூ மார்கெட் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களிடம் கமல்ஹாசன் வாக்கு சேகரித்தார்.