தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி   வேட்புமனு தாக்கல்

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி  தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட இன்று (15.3.2021)  வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.