பி.எஸ்.ஜி கல்லூரியில் என்சிசி மாணவர்களுக்கான ‘பி’ தேர்வு

பி.எஸ்.ஜி கல்லூரியில் தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் மாணவர்களுக்கான ‘பி’ தேர்வு நடைபெற்றது.

கோவை பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியில் 4-தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர்படையில் உள்ள மாணவர்களுக்கான ‘பி’ தேர்வு கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மார்ச் 6, 7 இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தேர்வு உரிய கொரோனா தற்காப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றது.

இதில் 6ம் தேதியில், அணிவகுப்புப் பயிற்சி, ஆயுதங்கள் குறித்த ஆய்வு, வரைபட பயிற்சி, தூரங்களை கணக்கிடல் என செய்முறைத்தேர்வும், 7ம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சார்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தேசிய மாணவர் படையில் உயரிய சான்றிதழாக கருதப்படும் ‘சி’ தேர்வு எழுதுவதற்கு இத்தேர்வே அடிப்படையாக உள்ளது. இத்தேர்விற்கான அடிப்படை வசதிகளை கோவை பி.எஸ்.ஜி பாலிடெக் கல்லூரி செய்து தந்துள்ளது.