தேர்தலில் போட்டியிட விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்!

களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் விமல். இவரது மனைவி அக்ஷயா. இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், விமலின் மனைவி அக்ஷயா வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

விமலும் அவரது மனைவி அக்‌ஷயாவும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்‌ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் தரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.