நாம் வாழ்வதற்கான வழிமுறைகள், திருக்குறளில்தான் உள்ளன – சுகிசிவம்

கோவையில் கதிர் பொறியியல் கல்லூரி மற்றும் ஈ-பாக்ஸ் காலேஜ், ஸ்கூல் சார்பில் திருவள்ளுவர் விழா கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் (28.2.2021) ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘திருக்குறள் கருத்துக்களைத் தன்னகத்தே பெரிதும் கொண்டிருப்பது கம்பராமாயணமே! வில்லி பாரதமே!’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இதில் கம்பராமாயணமே! என்ற தலைப்புக்கு மரபின் மைந்தன் முத்தையா, முனைவர்கள் இளங்கோவன், விவேக்பிரபு ஆகியோரும். மற்றோர்ப்புறம் வில்லி பாரதமே! என்ற தலைப்புக்கு மீ.உமாமகேஸ்வரி, மகேஸ்வரி சற்குரு, கனக துரிகா ஆகியோரும் பேசினார்கள். இந்த பட்டிமன்றத்திற்கு நடுவராக சுகிசிவம் பேசியதாவது: திருக்குறள் போன்ற இலக்கியம்தான், எல்ல்லோருக்கும் எல்லா காலத்துக்கும் தேவைப்படுகிறது. நாம் வாழ்வதற்கான வழிமுறைகள், திருக்குறளில்தான் உள்ளன. திருக்குறள் ஒவ்வொன்றும் ஒரு மந்திரம். திருக்குறள் போல் ஒரு உயர்ந்த நூல், இதுவரை எழுதப்படவில்லை. அதனால்தான் அது உலக பொதுமறையாக விளங்குகிறது. என பேசினார்.

இந்நிகழ்ச்சி அரசு வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சியினை கண்டுரசித்தனர்.