ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை, கோயமுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் ஆகியவை இணைந்து நடத்தும் 32 வது சாலை பாதுகாப்பு மாதத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வானது 22.01.2021 வெள்ளிக்கிழமையன்று கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அலுவலர் சி.வி.ராம்குமார், ராமகிருஷ்ணா கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், மத்திய மண்டலப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்நிகழ்வில் சாலை விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியும், முறையாக விதிமுறைகளைக் கடைபிடிக்கும் வாகன ஓட்டிகளுக்குச் சிறப்புப் பரிசு வழங்கியும், விபத்தில்லா கோவையை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வுடன் உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர்களும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழிப்புணர்வு நிகழ்வினை ராமகிருஷ்ணா கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர்களான பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.