டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் “முதல் காதல்” பதிப்பு அறிமுகம் !

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம், டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் வாகனத்தின் புதிய பதிப்பை லிமிடெட் எடிஷனாக அறிமுகப்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, டி.வி.எஸ் நிறுவனம் தமிழகத்தில் தமது வாடிக்கையாளர்களுக்காக ஸ்கூட்டி பெப் ப்ளஸின் “முதல் காதல்” பதிப்பை ப்ரத்யேகமாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய பதிப்பில் அதன் முத்திரைச் சின்னம் (லோகோ) தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழில் சின்னத்தை வடிவமைத்திருப்பது இரு சக்கர வாகனத் தொழில் துறையில் இதுவே முதல் முறை ஆகும். டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸின் “முதல் காதல்” பதிப்பில் நேர்த்தியையும் அழகையும் சேர்க்கும், அட்டகாசமான, கவர்ச்சியான சிறப்பு வடிவமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இவ்வாகனம் புதிய அழகிய வண்ணக் கலவைகளுடன் வருகிறது. டி.வி.எஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் இ.டி.–எஃப்ஐ இகோ த்ரஸ்ட் (ET-Fi Ecothrust engine) இன்ஜினால் இயக்கப்படுகிறது. இது 4 கிலோ வாட் சக்தியையும் 6.5 என்எம் முறுக்கு விசையையும் உருவாக்குகிறது. இத்துடன் 15 சதவீதம் அதிக மைலேஜ் மற்றும் மேம்பட்ட செயல்திறனையும் அளிக்கிறது. இதனால், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ், இந்தியாவின் மலிவு விலையிலான உயர் தர, ஸ்கூட்டராக தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிறது.