நாட்டுப்புற கலைஞர்களை பாராட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சர்வதேச தமிழ் பல்கலைகழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற கோவையை சேர்ந்த ஆறு நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த ஒரு மாதங்களாக நாட்டுப்புற கலைகளில் தொடர் சாதனையாக ஒரே அகாடமியை சேர்ந்த கல்லூரி மாணவ,மாணவியர்கள் கிராமிய கலைகளில்  பல்வேறு சாதனைகள் செய்து அசத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களது இந்த தொடர் சாதனையை பாராட்டி மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தை பல்கலைகழக வேந்தர் பாண்டியராஜன் வழங்கி கவுரவித்துள்ளார். இந்நிலையில் கோவை கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் உட்பட பட்டம் பெற்ற  அனைவருக்கும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், நமது பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளான கரகம், பறையிசை உள்ளிட்டவற்றில் ஒரு மாதமாக தொடர் சாதனை நிகழ்த்தி, மதுரை சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றுள்ள கோவையை சேர்ந்த கிராமிய புதல்வன் அகாடமியின் மாணவர்கள் இன்னும் பல சாதனைகள் படைக்க மனதார வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.