சிஆர்ஐ பம்ப்ஸ் மெக்கானிக் பிளம்பர்களுக்கான கவுரவ விழா

சிஆர்ஐ பம்ப்ஸ், சிஆர்ஐ பந்தன் திட்டத்தின் மூலம் கவுரவித்தது தனது மெக்கானிக் மற்றும் பிளம்பர்களை கவுரவித்துள்ளது. சிஆர்ஐ பொருட்களை அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து வாங்க பரிந்துரைத்த மெக்கானிக்குகள் மற்றும் பிளம்பர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கான விருதுகளும், அதிர்ஷ்ட குலுக்கலும் நடத்தப்பட்டன.

இதில் குறைந்தபட்சம் 10,000 புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த குலுக்கலில் 40,000க்கும் மேற்பட்ட மெக்கானிக்குகள் மற்றும் பிளம்பர்கள் கலந்து கொண்டனர். புள்ளி அடிப்படையிலான வெகுமதி திட்டத்தில் பைக்குகள், பிராண்டட் ஸ்பிலிட் ஏசிக்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கைபேசிகள் என பல பரிசுகள் இடப் பெற்றிருந்தன. மேலும், இந்நிகழ்ச்சியில் சிஆர்ஐ மார்க்கெட்டிங் துணைத் தலைவர் ஆர்.பூபதி மற்றும் இணைத் துணைத்தலைவர் சி.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.