அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு “சிறந்த ஆசிரியர்கள் விருது”

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டரி கிராமப்புற கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கோவை மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் முயற்சிகளை அடையாளம் கண்டு அங்கீகரித்துள்ளனர். விழாவில் 10 மற்றும் 12 – ம் வகுப்பை சேர்ந்த மொத்தம் 25 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இவர்களுக்கான விருது வழங்கும் விழா ,கோவை அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆஃப் காமர்ஸ் வளாகத்தில் உள்ள பால் ஹாரிஸ் ஹாலில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம், சச்சிதாந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளி, செயலாளர், டாக்டர். கவிதாசன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், ஆசிரியர் என்பவர் டாக்டர்களை போன்றவர்கள், டாக்டர்கள் உடலில் உள்ள நோய்களை போக்குகிறார்கள், ஆசிரியர்கள் மாணவர்களிடம் உள்ள அறியாமை என்ற நோயை போக்குகிறார்கள். எனவே அவர்களும் டாக்டர் போன்றவர்கள். துன்பத்திற்கு காரணம், ஆசை என்கிறார்கள். ஆனால் அது அல்ல திருப்தி இல்லாத மனதே துன்பத்திற்கு காரணம். துன்பத்திற்கான காரணங்கள் நான்கு, ஒன்று அறியாமை, இரண்டு அலச்சியம், மூன்றாவது சோம்பேறித்தனம், நான்காவது ஆணவம் ஆகும். பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்களிடம் படிப்பதற்காக உற்சாகமாக வரவேண்டும் அவ்வாறு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தினமும் தம்மை தரம் உயர்த்திக் கொள்ள வேண்டும். 

 

உலகத்திலேயே சிறந்த கல்வியை வழங்கும் நாடான பின்லாந்தில் உள்ள பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு நான்கு வகுப்றைகள் இருக்கும், அந்த நான்கிளும் ஒரே சமயத்தில் ஒரே பாடம் நடத்தப்படும், மாணவர்கள் தங்களுக்கு எந்த ஆசிரியரின் வகுப்பு பிடிக்கின்றதோ அந்த வகுப்பறையில் சென்று அமர்ந்து கொள்ளலாம். அங்கு நீதிபதிகளை விட ஆசிரியர்களுக்கு மதிப்பு அதிகம். இந்தியா ஒரு வளரும் நாடு, முப்பது ஆண்டு மாற்றம் இந்த மூன்று ஆண்டுகளிலேயே நடந்துள்ளது. உலகத்திலேயே அதிகப்படியான சிந்தனை நம்மிடம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.    

 

விருது வழங்கும் விழாவில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர், தலைவர், ரோட்டேரியன் சாண்டியாகோ ஜேசு பேசுகையில் :- அறிவியல், சமூக அறிவியல், கணிதம்ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற பாடங்களைக்கையாளும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பாடத்திலும் இரண்டு ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு விருது வழங்கப்படுகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளுக்கு 15 முக்கிய பாடங்களைக் கையாளும் ஆசிரியர்கள் தங்கள் முயற்சிகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள்” என்றார் அவர். ஆசிரியர்களின் தேர்வு குறித்து கருத்துத் தெரிவித்த திரு.சண்டிகோ ஜேசு கூறியதாவது, விருது வழங்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை, தேர்ச்சி சதவீதம், வகுப்பு சராசரி, ஒவ்வொரு பாடத்திலும் அதிகபட்ச மதிப்பெண்ஒவ்வொரு பாடத்திலும் மிககுறைந்த மதிப்பெண், பள்ளியின் இடம் ஆகிய அளவுருக்கள் அடிப்படையில் கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

 

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் அதன் 74 வது வருடத்தில் உள்ளது. 92 உறுப்பினர்களை கொண்ட சங்கம், பல்வேறு திட்டங்களில் மிகுந்த பரபரப்பாக ஈடுபட்டுள்ளது. கிளப் பெரும்பாலான கிராம வாசிகள் விவசாயம் மற்றும் வேளாண்மையை சார்ந்த பன்னிமடை அருகே உள்ள திப்புனூர் கிராமத்தை தத்து எடுத்து கொண்டுள்ளது. அடுத்த மாதத்தில், கிளப் ஒரு கால் நடைமுகாம், கிராமமக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் கிராமத்திற்கு அனைத்து வசதிகள் விரைவில் சமூக கூடத்தை அர்ப்பணிக்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் கோவை கிராமப்புற மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் ஊழியர்களைத் தேர்வு செய்து அவர்களின் சிறந்த சேவைக்காக விருது வழங்கவுள்ளது. 

உட்புற விளையாட்டுகள், உடற் பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள், ஜன்னல்களுக்கு கொசு வலைகள் மற்றும் நூலக வசதிகள் போன்ற வசதிகளுடன் துடியலூர் பகுதியில் ஆறு அரசு பள்ளி விடுதிகளை கிளப் அமைக்கவுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு 2018 ஜனவரி மாதம் இந்திய அரசின் எம்.எச்.ஆர்.டி.ஆல் பாராட்டப்பட்ட ஒரு மெகாபேண்ட் போட்டி நடத்தவுள்ளது.