மீண்டும் ராஜாளி கழுகுகள்

50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியக் காடுகளில் மிக எளிதாகக் காண முடிந்த பாறு கழுகுகள், இன்றைக்கு விரல்விட்டு எண்ணும் அளவிலேயே வாழ்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் வேதனையான உண்மை. காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் ஏன், மனித குலத்துக்குமே பேருதவியாக இருந்துவந்த இந்த பாறு கழுகுகள், காடுகளின் நோய்க் காப்பாளன் அல்லது இயற்கைத் தூய்மையாளன் என அழைக்கப்படுகின்றன.

செந்தலை அல்லது ராஜாளி என அழைக்கப்படும் red headed vulture 30-க்கும் குறைவாகவே இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கானுயிர் புகைப்படக்கலைஞரும் செயற்பாட்டாளருமான சந்தானராமன் என்பவர் சீகூர் பீடபூமி பகுதியில் கூடு அமைத்து வாழும் 3 ராஜாளிகளை புகைப்படம் எடுத்துள்ளார். இது ஒட்டுமொத்த பாறு கழுகு ஆய்வாளர்களையும் நம்பிக்கையடையச் செய்துள்ளது.

அழியும் தருவாயில் இருந்த ராஜாளி கழுகுகள் மீண்டும் ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு ராஜாளிகளுடன்  இளம் ராஜாளி கழுகும் இருந்தது பல இடர்பாடுகளையும் கடந்து இவை மீண்டு வருகின்றன என்பதை குறிக்கும் ஒரு நல்ல அறிகுறிகளாக கருதப்படுகிறது.

இவைகள் கூடமைத்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இவைகள் அழிவிருந்து மீளும் என்பதற்காக ஒரு ஆதாரமாக விளங்குகிறது.