அதிமுகவின் 49 வது ஆண்டுவிழா : கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்

கோவையில் மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோவை அவினாசி சாலையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலையிட்டு மறியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியையேற்றி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மறியாதை செய்யப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். இந்த விழாவில் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.