கோவையில் தமிழகத்தின் முதல் பிக்கீஸ் பர்கர் கிளை துவக்கம்

பல்வேறு மாநிலங்களில் பிரபலமான பிக்கீஸ் பர்கர் கோவை பர்கர் பிரியர்களுக்கென தனது முதல் கிளையை அவினாசி சாலையில் துவக்கியுள்ளது.

இந்தியாவில் இதற்கென தனி சுவையுடன் கேரளா, கர்நாடாகா என முக்கிய நகரங்களில் பர்கர் பிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது பிக்கீஸ் பர்கர். கடந்த 2011ல் இந்தியாவில் துவங்கி நாடு முழுவதும் வேகமாக 35 கிளைகளை கொண்டு சைவம் மற்றும் அசைவ வகை பர்கர்களை தனி சுவையுடன் வழங்கி வருகிறது.

இந்நிலையில் இதன் 36 வது கிளை கோவை அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் சி.எம்.சி கல்லூரி எதிரில் துவக்கியுள்ளது. இதற்கான துவக்க விழா பிக்கீஸ் பர்கரின் முழு தமிழக உரிமம் பெற்றவர்களான அருண் மற்றும் மிதுன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் நிறுவனத்தின் இயக்குனர் அபிலாஷ் பேசுகையில், தமிழகத்தின் முதல் கிளையை கோவையில் துவக்கியுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் சரவணம்பட்டி போன்ற பகுதிகளில் கிளைகளை துவக்க உள்ளதாக கூறினார். குறிப்பாக சைவ மற்றும் அசைவ வகை பர்கர்களுக்கென தனி சமையலறை வசதி உருவாக்கியுள்ளதாக கூறிய அவர் பிக்கீஸ் பர்கரின் கிரில் பர்கர் மிகவும் ருசியான அதே நேரத்தில் ஆரோக்கிய உணவு என தெரிவித்தார்.