அரசு மருத்துவமனைக்கு உணவு வாகனம் அர்ப்பணிப்பு

கோவையில் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் வகையில் மனிதநேய பவுண்டேஷன் அறக்கட்டளையினர் சார்பில் உணவு வாகனம் அர்ப்பணிக்கப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் ஏழைகள் என ஆயிரக்கணக்கானோர் பல்வேறு சிகிச்சை பெறுவதெற்கென வந்து செல்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு வரும் பொதுமக்களின் நலன் கருதி தினமும் மதிய உணவு வழங்குவதெற்கென பிரத்யேக உணவு வாகனத்தை கோவை மனிதநேய பவுண்டேஷன் அறக்கட்டளையினர் உருவாக்கியுள்ளனர்.

இந்த வாகன அர்ப்பணிப்பு நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக அனுபவ் ரவி, ஸ்ரீதேவி  சிவ கணேஷ்,சென்னை மொபைல்ஸ்  சம்சு அலி ஆகியோர் கலந்து கொண்டு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுலைமான், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஆதரவற்ற, ஏழை குடும்பத்தினர்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் இந்த வாகன சேவை துவங்கியுள்ளதாகவும், முழு நேரமும் உணவு வழங்குவதற்கெனவே இந்த வாகனத்தை பயன்படுத்த உள்ளதாக கூறிய அவர், தினமும் ஐநூறு முதல் ஆயிரம் பேர் வரை உணவளிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தென்றல் அறக்கட்டளை சித்தீக், அறம் சேவா அயூப் அலி, பால்ராசு மற்றும் சௌகத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.