கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் விபரங்களை கேட்டறிந்த ஆணையாளர்

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுப்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று 22.09.2020 மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலம் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை மையத்தில் சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களின் விபரங்கள் பற்றி சுகாதார பணியாளர்களிடம் கேட்டறிந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதை ஆய்வு செய்த ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அங்கிருந்த பொதுமக்களிடம் கட்டாயம் முகக்கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என தெரிவித்த பின்னர், முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கும்படி தொடர்புடைய அலுவலர்களிடம் தெரிவித்தார்கள். ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி ஆணையர் முருகன், மண்டல சுகாதார. அலுவலர்கள் சந்திரன் மற்றும் பணி மேற்பார்வையாளர், மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.