நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில், கோவை சிவானந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கட்சி தொண்டர்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கலந்து கொண்டு, நீட் தேர்வு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்ஸிட் கட்சியின் சிவானந்தபுரம் கிளையின் முன்னாள் கவுன்சிலர் செல்லக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.