இந்து – ஆதிதிராவிடர்களுக்காக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் இந்து – ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களான, நிலம் வாங்கும் திட்டம் (பெண்களுக்கு மட்டும்), நிலம் மேம்படுத்துல் திட்டம் (இருபாலருக்கும்), தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், சிறப்பு திட்டங்கள் பெட்ரோல்/டீசல்/கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல், (MBBS, BSMS, BDS and BPT பட்டம் பெற்றவர்களுக்கு), மகளிர்/ஆண்கள்/மாற்றுத் திறனாளிகள் / திருநங்கைகள் – சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி, மாவட்ட ஆட்சித்தலைவர்/மேலாண்மை இயக்குனர்/தாட்கோ தலைவர் ஆகியோரது விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கான நிதியுதவி, பட்டயக்கணக்கர் / செலவுக் கணக்கர்களுக்கு நிதியுதவி போன்ற திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட திட்டங்களின்கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்து – ஆதிதிராவிடர்களாக இருக்கவேண்டும். பிற மதத்திற்கு மாறியவர்களாக இருக்கக்கூடாது. இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 45 வரையும், இதர திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வரையும் இருக்கவேண்டும். விருப்புரிமை நிதி திட்டத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பதாரரது குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்திற்குள் இருக்கவேண்டும். சிறப்புத்திட்டமான மருத்துவமனை அமைக்க குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்குள் இருக்கவேண்டும். குழு திட்டங்களுக்கு குழு ஊக்குநர் மற்றும் உறுப்பினர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலும் இருக்கலாம். சிறப்பு திட்டங்களான பெட்ரோல்/டீசல்/கேஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க வருமான உச்ச வரம்பு கிடையாது. சாதி சான்றுகள்/வருமானச் சான்றுகள் வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் http://application.tahdco.com, என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை இணையதளம் மூலம் பதிவு செய்யவேண்டும்.