தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை பயன்படுத்த அறிவுரை

கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பி.என். பாளையம் ரோடு புளியகுளம், சிங்காநல்லூர் காமராஜர் ரோடு ஆகிய பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் அந்த பகுதிகளில் தினமும் மக்கும், மக்காத குப்பைகளை முறையாக சேகரிக்கப்படுகிறதா என்பதையும், கழிவு நீர் முறையாக அகற்றப்படுகிறதா?, தூய்மைப் பணியில் ஈடுபடும் பொழுது முகக்கவசம் மற்றும் கையுறை பயன்படுத்துகிறீர்களா என்பதையும் கேட்டு அதனை பயன்படுத்த அறிவுரை வழங்கினார்.

மேலும், உப்பிலிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவரும் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நீலிகோணாம்பாளையம், வரதராஜபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளையும் அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான பால் மற்றும் காய்கறிகள் சரிவர கிடைக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.