கே.பி.ஆர். கல்லூரியில் பயிற்சி முகாம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தமிழ்நாடு நேஷனல் கேடட் கார்ப்ட் சேலம் பயிற்சி முகாம் சார்பாக 164 மாணவர்களுக்கு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க வருகின்ற 16.10.17 வரை பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் லெப்டினன்டி கார்னர் பணிக்கர் மற்றும் குரூப் காமண்டர் கர்னல் எம்பி செலஸ்டின் தலைமையில் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த பயிற்சி முகாமில் ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல் மற்றும் முகாமில் வாழ்க்கை மற்றும் குழு வாழ்க்கை, கூட்டு முயற்சி, தலைமைபொறுப்பு, தன்னம்பிக்கை, தொழிலாளர் கண்ணியம் ஆகிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு சொற்பொழிவுகள், செய்து காட்டுதல் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சியாளர்களுக்கு பல்வேறு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி முகாமின் முக்கிய நோக்கம் தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி, ஒழுக்கம், கூட்டு முயற்சி, படை கூட்டு முயற்சி தலைமை பண்பு, தன்னம்பிக்கை மற்றும் பல்வேறு சுய முன்னேற்றம் ஆகியவையாகும். தேசிய மாணவர் படை சாதி மதம் வாய்ப்பை கொடுக்கிறது. இந்த பயிற்சி முகாம் தேசிய ஒருமைபாட்டிற்கு பெரிதும் துணைபுரியும்.