உலக சோலார் கார் பந்தையம்: நெதர்லாந்தை சேர்ந்த அணி வெற்றி

சூரிய ஒளியில் இயங்கும் கார்களுக்கான உலக சோலார் சேலஞ்ச் கார் பந்தயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. வடபகுதியில் உள்ள டார்வின் நகரத்தில் இருந்து தெற்கில் உள்ள அடிலைடு நகரம் வரையிலான பந்தையப் பாதையில் சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் மட்டும் 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கார்களை செலுத்த வேண்டும்.

இது இந்த போட்டிக்கான முக்கிய விதிமுறை ஆகும். இதில் நெதர்லாந்தைச் சேர்ந்த நூநா-நைன் அணி 37 மணி நேரத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.