அடல் தரவரிசையில் அவினாசிலிங்கம் பல்கலை., தேசிய அளவில் முதலிடம்

கண்டுபிடிப்பு சாதனைகள் தொடர்பான நிறுவனங்களின் அடல் தரவரிசை (ARIIA) என்பது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த 674 கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற ‘ARIIA’ தரவரிசையில் கோவையை சேர்ந்த அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முதல் இடம் கிடைத்துள்ளது. (பெண்களுக்கான உயர்கல்வி நிறுவனங்களில்) இரண்டாம் இடத்தை டெல்லியில் இந்திரா காந்தி பெண்கள் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

இது பட்ஜெட் மற்றும் நிதி ஆதரவு, உட்கட்டமைப்பு வசதிகள், கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், தொழில்முனைவோர் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வணிக மயமாக்கல், புதுமை கற்றல் முறைகளை காரணிகளாக கொண்டு இந்த தரவரிசை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது வழங்கும் விழாவானது நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஆகியோர் கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில், அவினாசிலிங்கம் பல்கலை.,யின் நிர்வாக அறங்காவலர், வேந்தர், துணைவேந்தர், பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.