வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பட்டயப்படிப்பு சேர்க்கை ஆரம்பம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கத்தின் வழியாக நடத்தப்படும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை முதுநிலைப் பட்டயப்படிப்புகளான, வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு, வேளாண்மைத் தொழில் நுட்பங்கள், தோட்டக்கலைத் தொழில்நுட்பங்கள், மூலிகை அறிவியல், பண்ணைக்கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பராமரிப்பு போன்ற பட்டயப் படிப்புகளுக்கும், பட்டுப்புழு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மூலிகைப் பயிர்கள் சாகுபடி, அங்கக வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சான்றிதழ் பாடங்களுக்கான சேர்க்கை இணையதளம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

2020-2021ம் ஆண்டுக்கான தொலைதூரக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தொலைதூரக்கல்வி இயக்குநர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய பட்டயப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பக்கட்டணத்தையும் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம்.