மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்

கோவை சரவணம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தேவையான தொழில் உதவி, நிதி உதவி, அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கி வருகின்றனர். இதே போல், கோவை சரவணம்பட்டி காவல் நிலையம் சார்பாக ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர். அதே போல் சுதந்திர தின வாரத்தையொட்டி நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ள

நிலையில் கோவை சரவணம்பட்டி ஆய்வாளர் செல்வராஜ் சுடர் சோசியல் வெல்பேர் கிளப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் துயரப்படும் செய்தியினை அறிந்து, அவர்களின் தேவையினை கேட்டறிந்து 1 மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை உதவி ஆணையர் சோமசுந்தரம், காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சோசியல் வெல்பர் கிளப்பின் செயலாளர் ராமநாதன், தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் திருஞானம், உறுப்பினர்கள் தீபிகா ராணி, செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.