சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு உதவிடும் வகையில் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கியின் மூலம் கடன் பெறலாம் என அறிவித்திருந்தது.

எனவே, வங்கிக்கடன் உதவித்தொகை பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்பவர்கள் தங்களது அலைபேசி எண், ஆதார் அட்டை எண், வங்கி கணக்கு புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்கள் ஆகிய ஆவணங்களுடன் மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் :