அண்ணா பல்கலைக்கழக தேர்ச்சி விகிதம்: கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதலிடம்

அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான, மாணவர்களின் பருவத்தேர்வு தேர்ச்சி சதவிகித தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல், தன்னாட்சிக் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி பெறாத கல்லூரிகள் என இரண்டு பட்டியல் இரண்டு பருவத்திற்கும் வெளியிடப்பட்டது.

இதில் தன்னாட்சி பெற்ற இணைப்புக் கல்லூரிகளுக்கான நவம்பர்-டிசம்பர் 2019 பருவத்தேர்வு தேர்ச்சி விகித பட்டியலில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கோவை மாவட்ட அளவில் முதல் இடத்தையும், தமிழகத்தில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தன்னாட்சி பெற்ற பின்பு நடைபெற்ற முதல் பருவத்தேர்வாகும். அதேபோல் தன்னாட்சி அல்லாத இணைப்புக் கல்லூரிகளின் ஏப்ரல்-மே 2019, தேர்ச்சி விகித பட்டியலில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கோவை மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

இச்சிறப்பிற்கு பின்னணியில் உள்ள மாணவர்களையும், பேராசிரியர்களையும் கல்லுரித் தலைவர் டாக்டர்.கே.பி.ராமசாமி பாராட்டினார்.