விவசாய கடன் அட்டை பெற அழைப்பு

கோவை மாவட்டத்திலுள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்ந்த விவசாய பெருமக்கள் விவசாய கடன் அட்டை பெற தகுதியான விண்ணப்பதாரர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்ந்த விவசாய பெருமக்களுக்கு மூலதனத்திற்கான நிதியுதவி வழங்கிட ஏதுவாக விவசாய கடன் அட்டை ( Kisan Credit Card) திட்டத்தை ஏற்படுத்தி வங்கியின் வாயிலாக கடன் உதவி பெற கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை சார்ந்த விவசாய பெருமக்களுக்கு விவசாய கடன் அட்டை வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளதால், மீன்பிடிப்பு ஃமீன்வளர்ப்பு சார்ந்த தொழில் செய்யும் கீழ்க்கண்ட உள்நாட்டு மீனவ விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை ( Kisan Credit Card) வழங்கப்படும்.

1.சொந்தமாக மீன்பண்ணை மற்றும் குளங்கள் வைத்திருப்போர்
2.நீர்நிலை குத்தகை எடுத்து மீன்வளப்பணி மேற்கொள்பவர்
3.மீன்குஞ்சு பொறிப்பகம் மற்றும் வளர்ப்பு பண்ணை வைத்திருப்போர்
4.மீன் பதனிடும் தொழில்புரிவோர்.

மேலே குறிப்பிடப்பட்ட விவசாயிகளுக்கு மூலதனமாக மீன்குஞ்சுகள், மீன் உணவு, இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், மண்ணின் தன்மை, மீன் அறுவடை மற்றும் விற்பனை செய்தல், குத்தகை தொகை போன்ற இனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற்றிட ஏதுவாக தகுதியான பயனாளிகள், உதவி இயக்குநர், மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகம், 2வது தளம், நெ.42 சுப்ராம் காம்ப்ளக்ஸ், பெருந்துறை ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஈரோடு -638011 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 0424 – 2221912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.