சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு திருநங்கைகளுக்கு அசைவ உணவு

நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

45 நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதல் நிகழ்ச்சியாக கோவை வடக்கு நகர தலைமை சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக மாவட்ட தலைவர் சுனில் தலைமையில் திருநங்கைகளுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் பொங்கியம்மா நகர் பகுதியில் நடைபெற்ற இதில் மாவட்ட நிர்வாகிகள் அஜ்ஜு மற்றும் வடிவேல் மற்றும் வடக்கு நகர தலைவர் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நலிவுற்ற நடைபாதை வியாபாரிக்கு பழக்கடை மற்றும் சாலையோரம் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்க உள்ளதாகவும், பிறந்த நாள் நிகழ்வாக இனி வரும் தொடர்ந்து மூன்று மாதங்கள் இது போன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக மாவட்ட தலைவர் சுனில் தெரிவித்தார்.