பொதுமுடக்கக் காலத்தில் 5.5 லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர்களை வழங்கிய ஸ்விக்கி நிறுவனம்

கொரோனா பொதுமுடக்க காலத்தில் சுமார் ஐந்தரை லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர்களை வழங்கியதாக ஸ்விக்கி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகையை முடக்கிப்போட்டுவிட்ட இந்த காலகட்டத்தில், பலர் சமையலில் தங்களின் கை வண்ணத்தைக் காட்டி அசத்தி வருகின்றனர் என்பது ஒருபக்கம் இருக்க, பொது முடக்கக் காலத்தில் இந்தியர்கள் சுமார் 5.5 லட்சம் சிக்கன் பிரியாணிகளை ஆர்டர் செய்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

உணவு விநியோக தளமான ஸ்விக்கி நிறுவனம், உணவுப் பொருள்கள் மட்டுமல்லாது, பொதுமுடக்க காலத்தில் இதர மளிகைப் பொருள்களையும் விநியோகிக்க தொடங்கியுள்ளது.

அதன்படி, கிட்டத்தட்ட 323 மில்லியன் கிலோ வெங்காயம் மற்றும் 56 மில்லியன் கிலோ வாழைப்பழங்கள் உள்ளிட்ட மளிகைப் பொருள்களை ஸ்விக்கி விநியோகம் செய்துள்ளது.

ஒரு நாளைக்கு சராசரியாக 65 ஆயிரம் உணவு ஆர்டர்கள் டெலிவரி செய்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1,29,000 சகோ லாவா கேக் மற்றும் கிட்டத்தட்ட 1,20,000 பிறந்தநாள் கேக்குகளை ஆர்டர் மூலம் ஸ்விக்கி நிறுவனம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்று, 73 ஆயிரம் கை சுத்தத் திரவம் (சானிடைசர்) மற்றும் 47 ஆயிரம் முகக் கவசங்களையும் ஆர்டர் மூலம் மக்களுக்கு விநியோகித்துள்ளது.

பொதுமுடக்கக் காலத்தில் 5.5 லட்சம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 30 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.