இலவசக் கல்லூரிப் படிப்பினைப் தந்த கே.பி.ஆர்

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற கே.பி.ஆர் மில்ஸ் பெண்களுக்கு இலவசக் கல்லூரிப் படிப்பினைப் படிக்க கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

நடப்பாண்டுக்குரிய தேர்வு முடிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள பெண்கள் சுபலெட்சுமி சுபஸ்ரீ (571), ருசிகா (561), திரிஷா (534) ஆகிய மூவரும் பெற்றுள்ள மதிப்பெண்கள் அவர்களுக்கு முழுநேர மேற்படிப்பைத் தொடர வழிவகுத்துத் தந்துள்ளன. கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி கோவையில் வேலை வாய்ப்புடன் கூடிய கல்விச் சேவையைச் சிறப்பாக வழங்கி வருகிறார். குறிப்பாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த சுபலெட்சுமி சுபஸ்ரீ, திரிஷா, ருசிகா ஆகிய மூவரும் மேற்படிப்பைத் தொடர கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பி.காம்.,(பி.ஏ) பாடப்பிரிவில் இலவசமாக இடஒதுக்கீடு செய்துகொடுத்து உதவி செய்துள்ளார்.

மேலும் அவர்கள் படிக்க விரும்பும் சிஏ (CA) மற்றும் ஐஏஎஸ் (IAS) போன்ற தேர்வுகளுக்குத் தயார்செய்ய கே.பி.ஆர். ஐஏஎஸ்  அகாடமியில் இலவசமாகப் படிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அவர்களின் கல்லூரிப் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொண்டு சேர்க்கை அளித்த கல்லூரியின் தலைவர் கே.பி.ராமசாமி, செயலர் முனுசாமி மற்றும் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி மற்றும் மேலாண்மைத் துறை டீன் சரவணபாண்டி ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.