சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு அரசின் நிவாரணப் பொருட்கள்

கோவை மாநகராட்சிப்பள்ளிகளில்1முதல்8-ம்வகுப்புவரைபயிலும் மாணவ,மாணவியர்களில்புரட்சித்தலைவர்எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் உணவு உண்ணும் பயனாளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, உலர்உணவுப் பொருட்களான அரிசி மற்றும்பருப்புஅந்தந்த பள்ளிச் சத்துணவு மையங்களில் வழங்கப்படும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிப்பள்ளிகளில்பயிலும்மாணவ,மாணவிகளில் சத்துணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மட்டும் 16.07.2020 முதல் 23.07.2020 முடிய சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக பள்ளி வேலை நாட்களில் (5 நாட்கள்) பள்ளிகளுக்கே சென்று பெற்றுகொள்ளலாம்.

இங்கு வரும் பெற்றோர்கள் முகக்கவசம்அணிந்தும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றியும் அவர்களது குழந்தைகள் பயிலும் பள்ளிக்குச் சென்று உலர்உணவுப் பொருட்களான அரிசி மற்றும் பருப்பு ஆகியவற்றை பெற்றுக் கொள்ளாம் என மாநகராட்சி அலுவகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.