வளர்ச்சிப்பணிகளின் முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வளர்ச்சிப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்கள், பொறியாளர்களுடன்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது: கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவருகிற அனைத்து பணிகளையும் குறித்த காலத்திற்குள் தரமானதாக விரைந்து முடிக்கவேண்டும் எனவும், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதிகுளம், செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம் ஆகிய குளங்களில் நடைபெற்று வருகிற வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமெனவும், மாநகராட்சி ஆணையாளர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள், பொறியாளர்கள் கலந்து கொண்டார்கள்.