தானாக நகரும் கற்கள்

கலிபோர்னியாவில் உள்ள Racetrack Playa எனப்படும் பள்ளத்தாக்கு ஓர் அமானுஷ்ய இடம். இங்கு கற்கள் தானாக நகர்ந்து செல்கிறது. மிகப்பெரிய கற்களும் கூட வெவ்வேறு திசையில் தானகவே பயணிக்கிறது. இன்று வரை எப்படி இது நடக்கின்றது என சரியான காரணங்கள் கூறப்படவில்லை. ஆனாலும் இங்கு கற்கள் நகர்வதற்கு நிலத்தின் களிமண் தன்மை, அதிர்வு, காற்று என பல காரணங்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இடத்தை இப்பொழுதும் பல பேர் ஆச்சிரியமாக பார்க்கிறார்கள்.