கேபிஆர் பொறியியல் கல்லூரியின் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச “சானிடைசர்”

கேபிஆர் நிறுவனம் அதிக சமுதாய பணிகள் செய்துவருகிறது. மேலும் கொரோனா காலத்திலும் பல உதவிகள் செய்துவருகிறது. இந்தவகையில் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் சார்பில் கல்லூரியிலேயே தயாரித்த ஒரு லிட்டர் கொள்ளவு கொண்ட “சானிடைசர்” கோவையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை அலுவலர் உமாவிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதன்மைச் செயலர் நடராஜன், கல்லூரியின் முதல்வர் அகிலா, கல்லூரியின் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி தாமரைகண்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் கேபிஆர் பொறியியல் கல்லூரி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்டறியம் மென்பொருளை உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை “தானியங்கி கிருமிநாசினி” உபகரணமும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.