மீண்டும் கூட்டம்… மீண்டும் தனிமனித இடைவெளி!

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் காளிதாஸ் தெரிவித்தார்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை 80 சதவீதம் அளவில் குறைந்தது.

தற்போது ஊரடங்குத் தளர்வு காலமாதலால் கோவை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்வேறு சிகிச்சைகள் மீண்டும் தொடங்கி நடந்து வருகின்றன. இதனால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.