மரணித்தும் வாழும் ஆன் ஃபிராங்க்

உலகப் புகழ்பெற்ற நாட்குறிப்பு நூலை எழுதிய ஆன் ஃபிராங்க் 1929 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.

ஹிட்லர் ஆட்சியின்போது பல கொடுமைகள் நடந்ததால் இவர்களது குடும்பம் ஒரு மறைவிடத்தில் வசித்தது. இவருடைய பிறந்தநாளுக்கு இவரின் தந்தையான ஓட்டோ பிராங்க் ஒரு டைரியை பரிசளித்தார். அதற்கு நாவலில் வரும் ‘கிட்டி’ என்ற கதாபாத்திரத்தின் பெயரையே சூட்டி, அதில் நாட்குறிப்புகளை எழுதி வந்தார்.

தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் குறித்தும் இந்திய சுதந்திரப் போராட்டங்கள் குறித்தும் அதில் எழுதினார். 1945 ஆம் ஆண்டு குடும்பத்தினர் அனைவரும் சித்ரவதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 15 ஆவது வயதில் ஆன் ஃபிராங்க் மறைந்தார்.

அந்த டைரியை ஒரு பெண் அவளுடைய தந்தையிடம் ஒப்படைத்தார். அந்த நாட்குறிப்பில் 1942 ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டு வரையிலான வாழ்க்கை பற்றிய பதிவுகள் இருந்தன. அதில் மரணத்துக்கு பின்பும் வாழ வேண்டும் என்று ஆன் ஃபிராங்க் எழுதியிருந்தார். தன் மகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடைய தந்தை அந்த டைரியை வெளியிட்டார்.

இதன் பதிப்பு பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர் தன் டைரி மூலம் இன்றும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.