தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை கட்டணம் நிர்ணயம்

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை கட்டணத்தை ஐஎம்ஏ தமிழகப் பிரிவு நிர்ணயித்துள்ளது.

லேசான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க பரிந்துரை.

தீவிர சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாட்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயம்.

சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ. 9600 வசூலிக்க பரிந்துரை

அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்க வேண்டும்

அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம்

தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கைகளை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும்.